https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7F0mV3mlsL-X5ZR0OFFtCMnQ5t4l3HKwpjmKmKX1gsnIN0XvCpEkI9e5Fg4W1cUwWkPLcNswXsjqAKyvSY-Nf0nIPEIIxRLbWUz4UMiRNlZDyfc7tQ_3KDnRg7UVhxySZTPl3PGV2ofCn/s1600/1.jpg
தற்போதய செய்திகள் :

துபாயில் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் இந்திய பெண்!

Written By Admin on Tuesday, 15 October 2019 | Tuesday, October 15, 2019

துபாயில் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற இந்தியாவின் முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார் சுஜா.

கேரளவைச் சேர்ந்த 36 வயதுடைய சுஜா தங்கச்சனுக்கு சிறு வயது முதலே தான் ஒரு கன ரக வாகன ஓட்டுநர் ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. கேரளப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிய இவரின் மாமனைப் பார்த்துச் சிறு வயதிலையே கன ரக வாகனம் ஓட்டும் ஆசையை வளர்த்துக்கொண்டார் சுஜா. வாழ்க்கையில் ஒரு நாள், தானும் கன ரக வாகனத்தை இயக்குவேன் என உறுதி எடுத்துக் கொண்ட சுஜா குடும்ப சூழ்நிலை காரணமாகக் கேரளாவை விட்டு வெளியேறினார்.

வறுமை சூழ்நிலை காரணமாக துபாய்க்கு நண்பர்களின் உதவியால் வேலை தேடிச் சென்றார். அங்குச் சென்றதும் கேரளத்தில் இனி தனக்கு எதிர்காலம் இல்லை எனக் கருதி அங்கேயே தனக்கான வேலையைத் தேடிக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சுஜாவின் சகோதரரின் நண்பர் துபாயில் உள்ள ஒரு பள்ளியில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். அவரின் உதவியால் அதே பள்ளியில் பேருந்து கிளீனராகச் சேர்ந்தார். பின்னர் பள்ளி நிர்வாகத்திடம் தனது ஆசைகளைக் கூறிய சுஜா, கன ரக ஒட்டுநர் உரிமம் பெறும் முயற்சியில் இறங்கினார். துபாயில் ஓட்டுநர் உரிமம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்குப் பல்வேறு பயிற்சிகள் இருக்கின்றன.

இதற்காகத் தனியாகப் பாடம் எடுப்பார்கள். பாடம் மற்றும் செய்முறை வகுப்புகளில் பங்கேற்க வேண்டும். உருது மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த வகுப்புகள் இருக்கும். கட்டணமும் சற்று அதிகம்தான். பல கடினப் பயிற்சிகளைத் தாண்டி, 6 முறை தோல்வி அடைந்த பின் கடைசியாக கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ஒட்டுநர் உரிமம் பெற்றுள்ளார். துபாயில் கன ரக ஒட்டுநர் உரிமம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் சுஜா.

தோல்விகளைத் தன் முயற்சியின் படிக்கட்டுகளாக வைத்து சாதனை படைத்துள்ள சுஜா பெண்களுக்கு மிகப் பெரிய உந்துசக்தியாகத் திகழ்கிறார்.
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 Comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

✔✔ உங்கள் வானொலி ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

விளம்பரம்

✔✔ A/L Result ✔✔

Advertise here

Technology

Like on Facebook

✔✔ Online People ✔✔

Mountain View

Common

Mountain View
 
Design by Mohamed Hasni