https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7F0mV3mlsL-X5ZR0OFFtCMnQ5t4l3HKwpjmKmKX1gsnIN0XvCpEkI9e5Fg4W1cUwWkPLcNswXsjqAKyvSY-Nf0nIPEIIxRLbWUz4UMiRNlZDyfc7tQ_3KDnRg7UVhxySZTPl3PGV2ofCn/s1600/1.jpg
தற்போதய செய்திகள் :

சமூக வலைத்தளங்கள் ஊடாக நிதி மோசடி – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Written By Admin on Monday, 14 October 2019 | Monday, October 14, 2019

சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளம் ஊடாக இடம்பெறும் நிதி மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு, குற்றத் தடுப்புப் பொலிஸார் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளம் ஊடாக பொதுமக்களை ஏமாற்றி, பண மோசடி செய்யும் நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு ஆதாரங்களுடன் தகவல் கிடைத்துள்ளது.

சந்தேக நபர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக நண்பர்களாக இணைந்து கொண்டு, நம்பிக்கையை ஏற்படுத்தி பண மோசடியில் ஈடுபடுவதாகவும் குற்றத்தடுப்புப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வெவ்வேறு நாடுகளில் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றுள்ளதாக அல்லது பரிசுகள் வெற்றி கொண்டுள்ளதாகத் தெரிவித்து, அவை சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக, குறித்த சந்தேக நபர்கள் பொய்யுரைப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெற்றி கொண்ட பரிசுப் பொருட்களையும் பணத்தையும் பெற்றுக் கொள்வதற்கு பணம் தேவைப்படுவதாகத் தெரிவித்து, சந்தேக நபர்கள் தமது வங்கிக் கணக்குகளுக்கு மக்களிடமிருந்து பணத்தை வைப்பிலிட்டுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு பணம் அல்லது பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு பணத்தை வைப்பிலிடுவதாயின், பொறுப்பு வாய்ந்த நிறுவனத்திடம் கேட்டறிந்து கொள்ளுமாறும் குற்றத் தடுப்புப் பொலிஸார், பொது மக்களை மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.(அ)

-ஐ. ஏ. காதிர் கான்-
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 Comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

✔✔ உங்கள் வானொலி ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

விளம்பரம்

✔✔ A/L Result ✔✔

Advertise here

Technology

Like on Facebook

✔✔ Online People ✔✔

Mountain View

Common

Mountain View
 
Design by Mohamed Hasni