அவிசாவளை பொலிஸ் பிரிவினை சேர்ந்த தெம்பிலியான பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட சந்திப்பொன்று பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டது.
பேஸ்புக் மூலம் இணைந்துகொண்ட இளைஞர் யுவதிகள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த களியாட்டத்தில் இருபத்தோரு இளைஞர்களும் நான்கு பெண்களும் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.
ஹெரோயின் கஞ்சா ஐஸ் போன்ற போதைப் பொருட்கள் இதன் போது கைப்பற்றப்பட்ட துடன் குறிப்பிட்ட இளைஞர் யுவதிகள்
எம்பிலிபிடிய கொழும்பு காலி மாத்தரை போன்ற பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் இன்று அவிசாவளை மாஜிஸ்திரேட் நீதிமன்றில் கையளிக்கப்பட உள்ளனர்.



0 Comments:
இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்