http://3.bp.blogspot.com/-7oSLkIk7UUs/ViYiKynRMlI/AAAAAAAAHqs/vJ3ELVCXRS0/s1600/1.jpg
தற்போதய செய்திகள் :

கத்தாரில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் தொகை 3000ஐ நெருங்கியது

Written By Admin on Sunday 12 April 2020 | Sunday, April 12, 2020

கத்தாரில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தொகை 2979 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் (12.04.2020) மட்டும் புதியதாக 251 கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கத்தார் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டு தற்போது சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்தாரில் கொரோனா வைரஸ் சந்தேகத்தின் பெயரில் இதுவரை 49102  பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 2979பேரே இதுவரை கொரோனா தெற்றினால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் கொரேனா வைரஸ் காரணமாக கத்தாரில் இது வரை 07 பேர் மரணடைந்துள்ளார்கள் என்பதுடன் இதுவரை 275 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் தொடர்பான முறைப்பாடுகளை பதிவு செய்ய 16000 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கத்தார் பொது சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 Comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

✔✔ உங்கள் வானொலி ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

விளம்பரம்

✔✔ A/L Result ✔✔

Advertise here

Technology

Like on Facebook

✔✔ Online People ✔✔

Mountain View

Common

Mountain View
 
Design by Mohamed Hasni