http://3.bp.blogspot.com/-7oSLkIk7UUs/ViYiKynRMlI/AAAAAAAAHqs/vJ3ELVCXRS0/s1600/1.jpg
தற்போதய செய்திகள் :

புத்தளத்து இளைஞர்களால் புதிய புரட்சி EDURA நாமும் கை கொடுப்போம்

Written By kalpitiya voice on Tuesday 8 September 2020 | Tuesday, September 08, 2020

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்...


"கற்பவனாக இரு, கற்பிப்பவனாக இரு, கற்பவனுக்கு உதவி செய்பவனாக இரு, நான்காமவனாக இருந்து விடாதே"



" ஒரு சமூகத்தின் எதிர்காலம் அதன் வகுப்பறைகளில் தான் தீர்மானிக்கபடுகின்றது ! "



இன்று புத்தளத்தின் கல்வி நிலையானது முன்பு இருந்ததை விட சற்று முன்னேறியே தான் காணப்படுகிறது... அல்ஹம்துலில்லாஹ்...



இருந்தாலும் சாதாரண ஏழை பிள்ளைகளுக்கு சரியான, தரமான, சமமான கல்வி சென்றடைகிறதா என்பது கேள்விக்குறியே!!!



ஒரு பிள்ளையினுடைய கல்வி நிலையை தீர்மானிப்பதில் முக்கிய வகிபாகத்தை அந்த பிள்ளைக்கு வழங்கப்படும் ஊக்கமும், அந்த பிள்ளையின் சூழல் மற்றும் சூழ்நிலையுமே கொண்டிருக்கின்றது...



எல்லா வசதி படைத்த மாணவர்களாலும் கற்றலை திறம்பட மேற்கொள்ள முடியாது என்பது போலவே தான் எல்லா ஏழை மாணவர்களுக்கும் தங்களது கற்றலை சுலபமாக மேற்கொள்ள முடியாது... என்னத்தான் கல்வியிலே நல்ல திறமை கொண்ட ஒரு மாணவராக இருந்தாலும் தன் குடும்ப கஷ்டத்தின் யதார்த்தத்தை உணரும் வயதை எட்டுகின்ற போது அந்தப்பிள்ளையின் சிந்தனையில் சறுக்கல்கள் ஏற்பட்டு கற்றல் தடைபட்டு போகும்...



அதற்கு ஒரு சிறந்த உதாரணம் நான்...☺️



எனவே பணம் இல்லாமலும், தங்களிடம் பணம் இல்லையே என்ற மனநிலையாலும் தங்கள் கற்றல்களில் பின்னடைவுகளை சந்தித்துள்ள மாணவர்களின் வாழ்வில் அவர்கள் எண்ணங்களிலும், சூழ் நிலைகளிலும் இருக்கின்ற தடைகளை இறைவன் உதவி கொண்டு நீக்கி கல்வி எனும் ஒளிபுகுத்தவே "Edura" (Educational Era) என்கிற அமைப்பை என்னுடைய சகோதரர்கள், நண்பர்கள் சிலரும், நானும் இணைந்து உருவாக்கியுள்ளோம்...



இந்த அமைப்பை பெருமளவில் பண வசதியை கொண்டோ, அல்லது உதவி வழங்குனர்களைக் கொண்டோ நாம் ஆரம்பிக்கவில்லை என்றாலும் எம் மனதில் இந்த சமூகத்தின் ஒரு சில மந்த நிலைகளை போக்க நிலையான கல்வியே சிறந்த மாற்றுவழி என்கிற உண்மை ஆழமாக ஊன்றப்பட்டிருப்பதால் அந்த சிந்தனையின் பின்னூட்டத்தோடு இந்த அமைப்பைக் கொண்டு ஏழை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு தொண்டாற்ற ஏதோ எம்மால் முடிந்த வழிகளை அமைத்துக் கொடுக்க தயாராகியுள்ளோம்...



படிப்படியாக தொடங்கி இன்று கல்வி தடைப்பட்டு போனதால் போதை, திருட்டு போன்ற விடயங்களில் புதையுண்டு போயுள்ள சில மாணவர்களையும், பண வசதியின்றி கல்வியை இடை நிறுத்திய மற்றும் நிறுத்தும் தருவாயில் இருக்கும் மாணவர்களையும் இணங்கண்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி, அவர்களிலிருந்து பல்துறை பட்டதாரிகளையும் , தொழில்சார் வல்லுனர்களையும் உருவாக்கி இந்த சமூகத்தின் உச்ச அடைவுகளுக்கு வழிவகுக்கும் பணியையே இதன் ஊடாக இன்ஷா அல்லாஹ் தொடங்க உள்ளோம் என்பதையும் இந்த பணிக்கு கரம் கொடுத்து உதவ உங்கள் ஆதரவுகளையும் மிகக் கனிவோடு எதிர்ப்பார்க்கிறோம் என்பதையும் அறியத்தருகின்றேன்...



நன்றி...



" வாழ்வு வேண்டின் வேண்டுக கல்வி "





Contact Mohamed Nazraq
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 Comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

✔✔ உங்கள் வானொலி ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

விளம்பரம்

✔✔ A/L Result ✔✔

Advertise here

Technology

Like on Facebook

✔✔ Online People ✔✔

Mountain View

Common

Mountain View
 
Design by Mohamed Hasni