https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7F0mV3mlsL-X5ZR0OFFtCMnQ5t4l3HKwpjmKmKX1gsnIN0XvCpEkI9e5Fg4W1cUwWkPLcNswXsjqAKyvSY-Nf0nIPEIIxRLbWUz4UMiRNlZDyfc7tQ_3KDnRg7UVhxySZTPl3PGV2ofCn/s1600/1.jpg
தற்போதய செய்திகள் :

ஜனாதிபதித் தேர்தல் வெற்றி குறித்து வெளியாகியுள்ள கணிப்பு

Written By Admin on Friday, 18 October 2019 | Friday, October 18, 2019

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுமக்கள் வாக்குகளை பயன்படுத்தும் விதம் தொடர்பாக சுயாதீன நிறுவனமான தேசிய கொள்கை நிலையம் விஞ்ஞான ரீதியான கணிப்பை வெளியிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அன்னப் பறவை சின்னம் வெற்றி பெற்ற மாவட்டங்கள், அது தோல்வியடைந்த மாவட்டங்கள், பிரதான வேட்பாளர்களாக மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் பெற்று கொண்ட வாக்கு வீதங்கள் என்பவற்றை இந்த கணிப்புக்கான மூலங்களாக அந்த நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.

இதனடிப்படையில் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 2018ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கு அமைய, மாவட்டங்களின் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு அமைய 2019ஆம் ஜனாதிபதித் தேர்தலில் அன்னப் பறவை சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாச, தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் பெறும் வாக்கு வீதத்தை தேசிய கொள்கை நிலையம் கணித்துள்ளது.

சஜித் பிரேமதாச 65 லட்சத்து 26 ஆயிரத்து 414 வாக்குகளை பெறுவார் என கணித்துள்ளதுடன், அந்த வாக்கு எண்ணிக்கையின் வீதம் 49.29 எனவும் கோத்தபாய ராஜபக்ச 61 லட்சத்து 72 ஆயித்து 241 வாக்குகளை பெறுவார் எனவும் அந்த வாக்குகளின் வீதம் 46.62 எனவும் அந்த நிறுவனம் கணித்துள்ளது.

மூன்றாவது வேட்பாளர் 5 லட்சத்து 40 ஆயிரத்து 624 வாக்குகளை பெறுவார் எனவும் அது 4.08 வீதம் எனவும் எனவும் நிறுவனம் கணித்துள்ளது.
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 Comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

✔✔ உங்கள் வானொலி ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

விளம்பரம்

✔✔ A/L Result ✔✔

Advertise here

Technology

Like on Facebook

✔✔ Online People ✔✔

Mountain View

Common

Mountain View
 
Design by Mohamed Hasni