https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7F0mV3mlsL-X5ZR0OFFtCMnQ5t4l3HKwpjmKmKX1gsnIN0XvCpEkI9e5Fg4W1cUwWkPLcNswXsjqAKyvSY-Nf0nIPEIIxRLbWUz4UMiRNlZDyfc7tQ_3KDnRg7UVhxySZTPl3PGV2ofCn/s1600/1.jpg
தற்போதய செய்திகள் :

வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வாரத்தில் 7 விமான சேவைகள்

Written By Admin on Saturday, 12 October 2019 | Saturday, October 12, 2019

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வாரத்துக்கு ஏழு விமான சேவைகளை நடத்துவதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

எயர் இந்தியாவின் துணை நிறுவனமான, அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக IANS வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் அனைத்துலக விமான நிலையமாக பெயரிடப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 17ம் திகதி நடக்கவுள்ளது.

இந்நிலையிலேயே, சென்னை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு வாரத்தில் 7 விமான சேவைகளை நடத்துவதற்கு அலையன்ஸ் எயர் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அலையன்ஸ் எயர் நிறுவனம் இலங்கைக்கான சேவைகளை நடத்துவதற்கு, இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, அனுமதி அளித்துள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்புக்கான விமான சேவைகளுக்கு அலையன்ஸ் எயர் நிறுவனம், ATR 72-600 விமானங்களைப் பயன்படுத்தவுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 Comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

✔✔ உங்கள் வானொலி ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

விளம்பரம்

✔✔ A/L Result ✔✔

Advertise here

Technology

Like on Facebook

✔✔ Online People ✔✔

Mountain View

Common

Mountain View
 
Design by Mohamed Hasni