https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7F0mV3mlsL-X5ZR0OFFtCMnQ5t4l3HKwpjmKmKX1gsnIN0XvCpEkI9e5Fg4W1cUwWkPLcNswXsjqAKyvSY-Nf0nIPEIIxRLbWUz4UMiRNlZDyfc7tQ_3KDnRg7UVhxySZTPl3PGV2ofCn/s1600/1.jpg
தற்போதய செய்திகள் :

ஆமை இரத்தம் குடித்து உயிர் தப்பினோம்: 22 நாட்கள் கடலில் தத்தலித்த மீனவர்கள் கண்ணீர்! (VIDEO)

Written By Admin on Saturday, 12 October 2019 | Saturday, October 12, 2019

செப்டம்பர் 22ம் திகதியளவில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போய், தற்போது மீண்டு வந்துள்ள மீனவர்கள் தாம் தினமும் ஆமை இரத்தம் குடித்து உயிர் பிழைத்து வந்ததாக தெரிவித்தனர்.

இறந்த சக மீனவரான காரைதீவை சேர்ந்த சண்முகம் சிரிகிருஷ்ணன் (வயது 47) பூதவுடலை ஆறு நாட்களாக உடன் வைத்திருந்த நிலையில் இறுதியாக கடலில் தூக்கி போட்டோம் என கரை திரும்பிய மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

கடந்த 18.09.2019ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று 22 நாட்களின் பின் கரை திரும்பிய மீனவர்களான சாய்ந்தமருதை சேர்ந்த சீனி முகம்மது ஜுனைதின் (வயது 36) இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது 37 ) ஆகியோர் திருகோணமலை பொலிஸ் நிலையம் ஊடாக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்கு கடந்த வியாழக்கிழமை(10) இரவு அழைத்து வரப்பட்டு ஒப்படைக்கப்பட்ட பின்னர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தங்களது வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர் தமது வீடுகளுக்குச் சென்றனர்.

இவ்வாறு காணாமல்போன மீனவர்களும் அந்த படகும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அவர்களை அணுகி குறித்த படகினை கரைக்கு கட்டி இழுத்து செல்ல உதவிய சகோதர இன மீனவர்களுக்கும் அதன் உரிமையாளருக்கும் மற்றும் இரவு பகல் பாரது அற்பணிப்புடன் செயல்பட்ட ஆழ்கடல் இயந்திரப் படகு உரிமையாளர் சங்கத்தினருக்கும் அதன் முக்கிய நிர்வாகிகளுக்கும் அனைத்து மீனவத் தொழிலாளர்களுக்கும் பொலிஸ், கடற்படை மற்றும் மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள் ஆகியோருக்கும், ஏனைய முக்கிய அதிகாரிகள், ஊடகங்கள் அனைவருக்கும் அவர்களுடைய குடும்பத்தினரும் குறித்த படகின் உரிமையாளர்களும் தங்களுடைய நன்றிகளை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டனர்.

மேலும் எம்மை எந்தவொரு அமைச்சர்களோ எமது சமூகம் சார்ந்த அரசியல்வாதிகளோ வந்து ஆறுதல் கூட சொல்லவில்லை.நாங்கள் அநாதையாக தான் தற்போதும் இறந்திருந்தால் கூட இருந்திருப்போம் என கண்கலங்கினார். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு தொலைத்தொடர்பு சாதனங்கள் இன்மையினாலே இவ்வாறான உயிரிழப்புகளும் உடமையிழப்புகளும் நிகழ்கின்றன.உயிரை பணயம் வைத்து கடலுக்கு செல்லும் இந்த மீனவர்களின் உழைப்பை நம்பி பல குடும்பங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன. மீனவர்களுக்கான அடிப்படை வசதிகளை உரிய அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்துகின்றனர்.



-பாறுக் ஷிஹான்
Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 Comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

✔✔ உங்கள் வானொலி ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

✔✔ உங்கள் விளம்பரம் ✔✔

விளம்பரம்

✔✔ A/L Result ✔✔

Advertise here

Technology

Like on Facebook

✔✔ Online People ✔✔

Mountain View

Common

Mountain View
 
Design by Mohamed Hasni